தில்லியில் அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக எந்தவித சட்டவிரோத நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (அக். 11) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி மற்றும் பிற அமைப்பினர் போராட்டம் நடத்த இருந்ததையொட்டி, தில்லி காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.போராட்டம் எதிரொலியாக பாதுகாப்பு வளையத்திற்குள் தலைநகர் தில்லி கொண்டு வரப்பட்டு, தில்லியில் 40 க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர்.மேலும், அமைதியான முறையில் போராட வந்த இளைஞர்கள் உள்பட சிஜேபி தலைவர்கள் அபிஜீத் தீப்கே, சௌரவ் தாஸ் அசுதோஷ் ரங்கா, சிபிஎம் மூத்த தலைவர்கள் என பலரை காவல்துறை கைது செய்தது.காவல்துறையினரின் இந்த அடக்குமுறைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகள்:அமைதியான முறையில் மற்றும் ஆயுதங்களின்றி கூடும் பொதுமக்களை சட்டவிரோதமாகக் கைது செய்யவோ காவலில் வைக்கவோ கூடாது.மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளை எவ்விதப் பாதிப்பும் இன்றி வழக்கமான கால அட்டவணைப்படி இயக்க வேண்டும்தில்லி முழுவதும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.இணையச் சேவைகள் எவ்விதத் தடையுமின்றி தொடர வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.தில்லியில் போராடிய இளைஞர்களை குண்டுக்கட்டாகக் கைது செய்த காவல்துறை!The Supreme Court categorically stated on Sunday (Oct. 11) that no illegal action should be taken against those gathering peacefully in Delhi.