நடிகர் அமிதாப் பச்சன் பிறந்த நாளுக்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒருகாலத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் அமிதாப் பச்சன். இந்தியா முழுவதும் ஹிந்திப் படமென்றாலே அமிதாப் பச்சன்தான் என்கிற பிம்பத்தைத் தன் வெற்றிப் படங்கள் மூலம் உருவாக்கியவர். இதுவரை 200 திரைப்படங்களுக்கும் அதிகமாக நடித்துள்ளார். ஐந்து தேசிய விருதுகளை வென்றுள்ளார்.கடைசியாக அமிதாப் பச்சன் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் 2024-ல் வெளியானது. 2025-ல் வெளியான 120 பகதூர் படத்தில் வாய்ஸ் ஓவர் அளித்திருந்தார். தற்போது, நடிகர் கமல் ஹாசனுடன் கல்கி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அமிதாப் பச்சனின் 84-வது பிறந்த நாளான இன்று அவருக்குப் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல் ஹாசனும் வாழ்த்துப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இதில், “கம்பீரமான குரலை ஒரு அடையாளமாகவும் பேசும்போது விடும் இடைவெளியை நாடகத்தன்மை மிக்கதாகவும் புருவத்தை உயர்த்துவதைக்கூட கதையின் திருப்பமாகவும் மாற்றியவர்!சாதாரணமான, “தேவியோன் அவுர் சஜ்ஜனோ” (பெண்களே, பெரியோர்களே) என்ற வார்த்தைகளைக்கூட அமிதாப் பச்சன் பிளாக்பஸ்டர் தொடக்கக் காட்சியைப் போல மாற்றிவிடுவார். அவர் எப்போதுமே தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். ஆக்ரோஷமான இளைஞரே... பிறந்த நாள் வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரைக் காதலிக்கும் திவ்ய பாரதி? Actor Kamal Haasan has extended birthday wishes to actor Amitabh Bachchan.