தில்லியில் போராடிய இளைஞர்களை குண்டுக்கட்டாகக் கைது செய்த காவல்துறை!

Wait 5 sec.

தில்லியின் மிக முக்கிய வணிக மையமான கன்னாட் பிளேஸின் இன்னர் சர்க்கிளில் போராடிய இளைஞர்களை தில்லி காவல்துறை குண்டுக்கடாகக் கைது செய்துள்ளது.இந்திய தலைமை தேர்தல் ஆனையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி தில்லியில் போராடிய எஸ்.எஃப்.ஐ, ஏ.ஐ.எஸ்.எஃப் மற்றும் ஏ.ஐ.ஒய்.எஃப் அமைப்புகளைச் சார்ந்த இளைஞர்களை காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (அக். 11) கைது செய்துள்ளது.வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டி அவர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் போன்றவை தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.இதைத் தொடர்ந்து, தில்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டத்தை முன்னெடுக்கவிருந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டு இன்று விடுதலை செய்யப்பட்டனர்.இருப்பினும், நாடு முழுவது ஆங்காங்கே மாணவர் அமைப்புகள் போராடி வருகின்றன. அதன்படி, தில்லியின் கன்னாட் பிளேஸின் இன்னர் சர்க்கிளில் போராடிய மாணவர் அமைப்புகளைச் சார்ந்த இளைஞர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தில்லியில் நேற்று மட்டும் சுமார் 30,000 க்கும் மேற்பட்டகாவல்துறை மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.#WATCH | Delhi: Workers of SFI, AISF and AIYF are being detained by Delhi Police while holding a protest against CEC Gynesh Kumar at the Inner Circle of Connaught Place. pic.twitter.com/oM80AiZzlN— ANI (@ANI) October 11, 2026சிஜேபி போராட்டம்: அபிஜீத் தீப்கே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிப்பு!The Delhi Police have forcibly arrested the youths who were protesting at the Inner Circle of Connaught Place, a major commercial hub in Delhi.