பாக்கெட் நாவல் திரைப்படத்திலிருந்து இளையராஜா விலகல்?

Wait 5 sec.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் பாக்கெட் நாவல் திரைப்படத்திலிருந்து இளையராஜா விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம் “பாக்கெட் நாவல்”. ஏற்கெனவே, சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு தேசிய விருது பெற்ற இந்தக் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்தப் படத்தில் நடிகர்கள் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் விடியோ வெளியிட்டு அறிவித்தனர். அதில், இப்படத்தின் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்ட இளையராஜாவின் பெயர் இடம்பெறாமல் இருக்கிறது. தகவலின்படி, இளையராஜாவுக்கும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இளையராஜா படத்திலிருந்து விலகிவிட்டாராம். மேலும், புதிய இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. உங்க விருப்பத்துக்கு... தொகுப்பாளரால் கோபமடைந்த சூரி! ஏன்? Reports have emerged that Ilaiyaraaja has opted out of the film Pocket Novel, directed by Thiagarajan Kumararaja.