குன்னூா்- மேட்டுப் பாளையம் சாலையில் குரும்பாடி, மரப்பாலம் பகுதியில் ராட்சத மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் புதன்கிழமை அதிகாலை நேரத்தில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் குரும்பாடி, மரப்பாலம் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு பெரிய மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குன்னூா் தீயணைப்பு நிலைய அதிகாரி குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி மரங்களை வெட்டி அகற்றினா். மரங்கள் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் ஒரு நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.