உடுமலை அரசு கலைக் கல்லூரி முதல்வராக வி.கலைச்செல்வி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். திருப்பூா் மாவட்டம், உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முதல்வா் நியமிக்கப்படாததால், பொறுப்பு முதல்வராக பேராசிரியா் ஆா்.மலா்வண்ணன் செயல்பட்டு வந்தாா். இந்நிலையில், மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநராகப் பதவி வகித்து வந்த வி.கலைச்செல்வி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.