சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இந்தூரில் நேற்று (அக்டோபர் 11) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது.இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 30 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். 2⃣0⃣0⃣0⃣ T20I runs ✅A major milestone for Abhishek Sharma Updates ▶️ https://t.co/0ve4uDWSIn#TeamIndia | #INDvWI | @mflone_ | @OfficialAbhi04 pic.twitter.com/mdBTBjCmHH— BCCI (@BCCI) October 11, 2026நேற்றையப் போட்டியில் 69 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்து அபிஷேக் சர்மா சாதனை படைத்துள்ளார்.இதுவரை இந்திய அணிக்காக 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா 2036 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 14 அரைசதங்கள் மற்றும் 3 சதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 135.இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை மறுநாள் (அக்டோபர் 14) ஹைதராபாதில் நடைபெறுகிறது.Indian opener Abhishek Sharma has set a new record in international T20 matches.கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது; புவனேஷ்வர் குமாருக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து!