நடிகை அனுபமா பரமேஸ்வரன் காதலில் பிரிவு குறித்து பேசியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் திரைத்துறைகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். நீண்ட காலமாக நடிகர் துருவ் விக்ரமுடன் இணைத்துப் பேசப்பட்டு வந்த நிலையில்தான்,அனுபமா நேர்காணல் அளித்தார். அதில், “நார்ஸிஸ்ட் காதல் வன்முறை குறித்து யாரும் பெரிதாக அறிவதில்லை. இது உளவியல் ரீதியாக நம்மைத் துன்புறுத்துவது. என் முன்னாள் காதலில் நடந்தது இதுதான். கடந்த 2 ஆண்டுகளாக நான் இதை அனுபவித்து வந்தேன். ஆனால், இது வன்முறைதான் என்பதை அறியவே நீண்ட காலம் ஆகிவிட்டது.அந்த காலகட்டத்தில்தான் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு, என் உடல் எடையைக் குறைத்தேன்.எனது இன்ஸ்டாகிராம் பதிவுக்குப் பின்னால் இரண்டு ஆண்டுகால வலியும் போராட்டங்களும் உள்ளன.” என்றார். மேலும், அந்தக் காதலர் ஒருநாள் அந்நியன் இன்னொரு நாள் ரெமோ என தான் அனுபவித்த வலிகளைக் கூறினார். தற்போது அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவான கிரேஸி கல்யாணம் வருகிற அக். 16 ஆம் தேதி வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட அனுபமாவிடம் காதல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “காதலும் அழகுதான். அதேநேரம், பிரிவும் அழகானதுதான். நீங்கள் அதிலிருந்து எதை உணர்ந்தீர்கள் என்பதைப் பொறுத்துதான்” என்றார். சரக்கு இல்லையென்றால்... கவனம் பெறும் ரஜினிகாந்த் பேச்சு! Actress Anupama Parameswaran has spoken about a breakup in her relationship.