ஜேசன் ஒரு முழுமையான பிக் பாஸ் போட்டியாளர் என்றும், எதற்குமே தயாராகாமல் வந்த தன்னைக் கண்டால் அவருக்கு பொறாமை வருவது இயல்பு எனவும் டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார். ஜேசன் குறித்து நடிகை தன்யாவிடமும் பிக் பாஸ் காமன்மேன் போட்டியாளர் கரீஷ்மாவிடமும் பேசும்போது வாசன் இவ்வாறு பேசியுள்ளார். இது தொடர்பாக டிடிஎஃப் வாசன் பேசியதாவது:''ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் என அனைத்து மொழி பிக் பாஸ் நிகழ்ச்சிகளையும் பார்த்து முழு பிக் பாஸ் போட்டியாளராகத் தயாராகி வந்தவர் ஜேசன். 6 ஆண்டுகளாக இதற்காக அவர் தயாராகியுள்ளார். ஒரு முழுமையான பிக் பாஸ் நபர் அவர். எதற்குமே தயாராகாமல் இந்த இடத்துக்கு வந்த என்னைக் கண்டால் பொறாமை வருமா? வராதா? நமக்குதான் தெரியும் நாம் எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளும் ஆள் இல்லை என்று. தெரியாத விஷயங்களை கூச்சப்படாமல் கேட்டு தெரிந்துகொள்வது நம் இயல்பு'' என கரீஷ்மாவிடமும் தன்யாவிடமும் பேசியுள்ளார். டிடிஎஃப் வாசன் பல இடங்களில் தடுமாறும்போதும் பலரின் விமர்சனங்களை எதிர்கொள்ளும்போதும், அவருக்கு துணையாக வந்து நிற்பவராக ஜேசன் இருக்கிறார். இதனிடையே ஜேசன் குறித்து டிடிஎஃப் வாசன் பேசியுள்ளது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக டிடிஎஃப் வாசன், நடிகை அக்ஷிதா மற்றும் பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சி போட்டியாளர் கரீஷ்மா ஆகியோர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.பிக் பாஸ் 10: டிடிஎஃப் வாசனுக்கு ரசிகர்கள் ஆரவாரம்! கைதட்டல்களால் உடைந்த முனியம்மாவின் நம்பிக்கை! Bigg boss 10 tamil Jason is jealous of me TTF Vasan speaks openly to Dhanya kareeshma