டர்பன் டெஸ்ட்டில் ஆஸி. பேட்டிங்..! நிக் மேடின்சன் அறிமுகம், லபுஷேனுக்கு மீண்டும் வாய்ப்பு!

Wait 5 sec.

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் இன்று (அக்.9) இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்த அணியில் அறிமுக வீரர் நிக் மேடின்சன் இணைந்துள்ளார். மார்னஸ் லபுஷேனுக்கும் மற்றுமொரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தென்னாப்பிரிக்க மண்ணில் வெற்றி பெறாமல் இருக்கும் ஆஸி. அணிக்கு அதனை மாற்ற இது நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: டிராவிஸ் ஹெட், நிக் மேடின்சன், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், மேட் ரென்ஷா, அலெக்ஸ் கேரி (கீப்பர்), போ வெப்ஸ்டர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட். தென்னாப்பிரிக்கா பிளேயிங் லெவன்: எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், டேவிட் பெடிங்ஹாம், டெம்பா பவுமா (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர், கைல் வெர்ரின்னே (கீப்பர்), மார்கோ ஜான்சன், சைமன் ஹார்மர், கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்கே. இந்தியாவில் இந்தப் போட்டியை ஃபேன்கோட் (fancode) செயலில் நேரலையில் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Australia have won the toss and have opted to bat, Marnus and New comer Nic Maddinson in against south africa 1st test