சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 13) விசாரணைக்கு வரும் வழக்குகள்?

Wait 5 sec.

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 13) விசாரணைக்கு வருகின்றன.அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த எம்எல்ஏக்கள் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.அமலாக்கத்துறை நடவடிக்கைகளை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் கௌதம சிகாமணி தொடர்ந்த வழக்கு விசாரிக்கப்படவுள்ளது.அவதூறு வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவு தாக்கல் செய்த வழக்கு விசாரிக்கப்படவுள்ளது.முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர், என். ஆனந்த் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் இன்று விசாரிக்கப்படவுள்ளன.தீவுத்திடலில் இடம் ஒதுக்கக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கம் தாக்கல் செய்த வழக்கும் இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.Cases concerning the resignation of AIADMK MLAs and charges against former Minister Ponmudi and others are coming up for hearing at the Madras High Court today (Oct. 13).