மைலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.-வும், முன்னாள் சட்டத் துறை அமைச்சருமான சி.வி. சண்முகத்திற்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மைலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், 30,041 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.அவரது வெற்றியை எதிர்த்து, வாக்காளர் கமலக்கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ சி.வி. சண்முகம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார்.அந்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, மைலம் எம்.எல்.ஏ. சி.வி.சண்முகத்தின் நிராகரிப்பு மனுவை ஏற்று, அவரது வெற்றியை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.Case challenging ADMK C.V. Shanmugam's victory dismissed‘6 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவரின் நடவடிக்கை செல்லும்’ - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!