தில்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. பல்வேறு தடைகளை மீறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தில்லியில் வழக்கமாக போராட்டங்கள் நடக்கும் ஜந்தர் மந்தரில் போராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தர் இனி போராட்டத்திற்கான இடம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பதிலாக, ராம்லீலா மைதானம் (Ramlila Ground), புராடி மைதானம், கிழக்கு தில்லியில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய மூன்று இடங்கள் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான புதிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தடையை மீறி ஜந்தர் மந்தர் அருகே சிஜேபியின் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா ஆகியோர் போராட்டம் நடத்த முயன்ற நிலையில் அவர்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது. CJP Ashutosh Rana, Saurav Das and protesters detained for protesting Jantar Mantarராகுல், இந்தியா கூட்டணி தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 14 பிழைகள்!