இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் வீழ்ச்சியடைந்த நிலையில் இன்று (அக். 13, செவ்வாய்க்கிழமை) உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 71,951.73 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 633.64 புள்ளிகள் உயர்ந்து 72,566.73 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 197.40 புள்ளிகள் உயர்ந்து 22,560.75 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.நிஃப்டி50 குறியீட்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் முறையே 0.01 சதவீதம் மற்றும் 1.06 சதவீதம் சரிந்தன.துறைவாரியாக, நிஃப்டி ஐடி அதிகபட்சமாக உயர்ந்தது. அதே நேரத்தில் நிஃப்டி மீடியா, பார்மா, ஆட்டோ ஆகியவை அதிகபட்சமாக சரிந்தன.Stock Market: Sensex at day's high, up 600 pts, Nifty tops 22,550