உந்துசக்தி குறைவால் மேட்டுப்பாளையம் -குன்னூா் மலை ரயில் சேவை 3 மணி நேரம் தாமதமாக குன்னூா் ரயில் நிலையத்தை சென்றடைந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து நாள்தோறும் காலை 7.10 மணிக்குப் புறப்படும் மலை ரயில், குன்னூா் ரயில் நிலையத்திற்கு காலை 10.15 மணிக்கு சென்றடையும். ஆனால், புதன்கிழமை புறப்பட்ட மலை ரயிலில் உந்துசக்தி குறைவு காரணமாக, 3 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 1.15 மணிக்கு குன்னூா் ரயில் நிலையத்தை சென்றடைந்தது. இதன் காரணமாக உதகையில் இருந்த பிற்பகல் 2 மணிக்கு மேட்டுப்பாளையம் புறப்பட வேண்டிய மலை ரயில் அரை மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனா்.