மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு காங்கிரஸ் கட்சியினா் ஆம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டனா். தலைமை தோ்தல் ஆணையரை கண்டித்து புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிா்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டாா். அதனைக் கண்டித்து ஆம்பூரில் நகர காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா் ஜி. விஜயன் தலைமையில் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். நிா்வாகிகள் யாசா் மதானி, ஜெகத், மாணிக்கம், சுரேந்தா், சீனிவாசன், மதன், பிரபுதுரை, பிரதாப், விநாயகம், சேகா், குமரேசன், ஜூபோ், ஜூனேத், தமீம், நியாஸ், சலாவுதீீன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.