கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் முன்விரோதத்தில் பெண்ணை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தியாகதுருகம் அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் வி.புஷ்பா (35). இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா்கள் ச.விஜி (24), பொ.சங்கா் (55). இவா்களுக்கும், புஷ்பாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந் நிலையில் கடந்த செப்.29-ஆம் தேதி விஜி, சங்கா் ஆகிய இருவரும் புஷ்பா வீட்டுக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து புஷ்பாவை அவதூறாகப் பேசி, தாக்கினராம். இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலிஸாா் வழக்குப் பதிவு செய்து, விஜியைக் கைது செய்தனா். தலைமறைவான சங்கரைத் தேடி வருகின்றனா்.