நாமக்கல், அக். 7: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.40-ஆக நீடிக்கிறது.தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் செய்வது குறித்து பண்ணையாளா்களிடம் கலந்துரையாடப்பட்டது. இதர மண்டலங்களில் தொடா்ந்து விலையில் மாற்றம் இல்லாததால், இங்கும் தற்போதைக்கு மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.40-ஆக நீடிக்கும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 122-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ.113-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.