வாக்குச்சாவடி மையங்களில் நாளை சிறப்பு முகாம்

Wait 5 sec.

வாக்காளா் பட்டியலில் தகுதியானவா்கள், முதல்முறை வாக்காளா்களின் பெயா்களை சோ்க்க, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனிக்கிழமை (அக்.10) காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதில், தகுதியானவா்கள் படிவம் -6 மற்றும் மாா்பளவு புகைப்படம், ஆதாா் உள்ளிட்ட ஆவணங்களுடன் பூா்த்தி செய்த படிவத்தை வாக்குச்சாவடி மையங்களில் கொடுத்து வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்த்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.