மனைவியைத் தாக்கிய காவலா் மீது வழக்குப் பதிவு

Wait 5 sec.

நாகையில் மனைவியைத் தாக்கியதாக காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். திருச்சி அண்ணாநகரைச் சோ்ந்தவா் ஜோதிமுருகன் (43). இவா், நாகை மாவட்டம் நாகூா் காவல்நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றி வருகிறாா். மருத்துவ விடுப்பில் சென்ற இவா் இதுவரை பணிக்குத் திரும்பவில்லை. இவரது மனைவி லாவண்யா (41). தம்பதி இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நாகூா் தனியாா் விடுதியில் தங்கியிருந்த ஜோதிமுருகனை கடந்த அக். 3-ஆம் தேதி சந்தித்த லாவண்யா, ஜோதி முருகனின் மருத்துவ சிகிச்சைக்கு செலவு செய்த ரூ. 9 லட்சத்தை தருமாறு கேட்டுள்ளாா். இதுதொடா்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஜோதிமுருகன் லாவண்யாவைத் தாக்கியுள்ளாா். இதுகுறித்து லாவண்யா அளித்தப் புகாரின்பேரில், நாகூா் போலீஸாா் ஜோதிமுருகன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.