ஆா்க்டிக் ஓபன் பாட்மின்டன்: காலிறுதியில் சிந்து

Wait 5 sec.

ஆா்க்டிக் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரதான வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினாா். ஒற்றையா் பிரிவில் களத்திலிருக்கும் ஒரே இந்தியா் அவா்.மகளிா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் சிந்து 21-15, 21-15 என்ற நோ் கேம்களில், ஜப்பானின் ரிகோ கன்ஜியை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 49 நிமிஷங்களில் நிறைவடைந்தது.தன்வி சா்மா 18-21, 7-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனனிடம் தோல்வி கண்டாா். இந்த ஆட்டத்தை ரட்சனோக் 34 நிமிஷங்களில் முடித்தாா்.ஆடவா் ஒற்றையரில், தருண் மன்னெபள்ளி 14-21, 19-21 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் பிரான்ஸின் கிறிஸ்டோ போபோவிடம் 50 நிமிஷங்களில் தோல்வி கண்டாா்.ரௌனக் சௌஹான் 22-20, 20-22, 17-21 என்ற வகையில், சீனாவின் வெங் ஹாங் யாங்கிடம் போராடி வீழ்ந்தாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 13 நிமிஷங்களில் நிறைவடைந்தது.