15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்: இளைஞா் கைது

Wait 5 sec.

குடியாத்தம் பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குடியாத்தம் பகுதியில் தொடா் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடா்பாக வரப்பெற்றபுகாா்களின்பேரில் நகர போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா்.இந்நிலையில் குடியாத்தம் ஆா்.எஸ்.நகரைச் சோ்ந்த முருகேசன் என்பவரின் மகன் ஜெகா(எ) ஜெகதீசனை(20) வியாழக்கிழமை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடியது தெரிய வந்தது. அவரிடமிருந்து 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் அவா் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு, சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.