வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், செங்கல்பட்டு ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டு ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் வைத்து எண்ணப்படுகிறது. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மேசைகளும், மின்னணு வாக்குகளுக்கு 14 மேசைகளும் அமைக்கப்பட்டு, 20 சுற்றுகளாக எண்ணிக்கை நடைபெறுகிறது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குகள் எண்ணப்படும்.மதுராந்தகம் இடைத்தேர்தல்: வெற்றி யாருக்கு?சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சாா்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததால், இந்தத் தொகுதியில், கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சாா்பில் மரகதம் குமரவேல், திமுக சாா்பில் இ.பரந்தாமன், அதிமுக சாா்பில் கணிதா சம்பத், நாதக சாா்பில் ஜானகிராமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் சுகந்தி உள்ளிட்ட வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.