வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் 14 மேசைகள் அமைக்கப்பட்டு, 23 சுற்றுகளாக எண்ணிக்கை நடைபெறுகிறது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குகள் எண்ணப்படும்.தாராபுரம் இடைத்தேர்தல்: வெற்றி யாருக்கு?சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சாா்பில் தாராபுரம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற சத்தியபாமா, தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததால், இந்தத் தொகுதியில், கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சாா்பில் சத்தியபாமா, திமுக சாா்பில் சுகன்யா, அதிமுக சாா்பில் க.பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் லட்சுமணன் உள்ளிட்டோா் களத்தில் இருந்தனா்.