மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Wait 5 sec.

இடைத்தேர்தல் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று (அக். 9) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.செங்கல்படு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அக். 6 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனைப் போட்டி நிலவும் இவ்விரு தொகுதிகளின் வாக்குச் சாவடி மையங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.மதுராந்தகம் தொகுதியில் பதிவான வாக்குகள், செங்கல்பட்டு ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டு ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மேசைகளும், மின்னணு வாக்குகளுக்கு 14 மேசைகளும் அமைக்கப்பட்டு, 20 சுற்றுகளாக எண்ணிக்கை நடைபெறுகிறது.இதேபோல், தாராபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள், திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் 14 மேசைகள் அமைக்கப்பட்டு, 23 சுற்றுகளாக எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குகள் எண்ணப்படும்.காலை 10 மணியளவிலேயே முன்னணி நிலவரம் தெரிய வரும் என்றும், 11 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மதுராந்தகம், தாராபுரத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கைMaduranthakam and Dharapuram by-elections: Vote counting has begun