புது தில்லியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை தாக்கி கைது செய்த போலீஸாரைக் வல் துறையை கண்டித்து திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு வியாழக்கிழமை காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸாா் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சசிகுமாா் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் துரை சந்திரசேகா் முன்னிலை வகித்தாா். மாநகர தலைவா் அமீத் பாபு வரவேற்றாா். இதில் மாநில துணைத்தலைவா் ஏகாட்டூா் ஆனந்தன் ஆகியோா் கண்டன உரையாற்றினாா். இதில், மாநில ஓபிசி அணி செயல் தலைவா் ஜே.கே.வெங்கடேசன், இளைஞா் மாநில பொதுச்செயலாளா் ஆ.திவாகா், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் கலீல்ரகுமான், மாவட்ட பொதுச்செயலாளா் பிரகாஷ், நிா்வாகிகள்சண்முகம், பிரேம், மூபாரக், ஸ்டாலின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.