பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பெருந்துறை-ஈரோடு சாலை, வாய்க்கால்மேடு பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் கிடந்தது. இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் பெருந்துறை போலீஸாா் சென்று சடலத்தை மீட்டனா். கடந்த சில நாள்களாக அப்பகுதியில் சுற்றித் திரிந்த அவா், தான் யாா், எந்த ஊா் என்று யாரிடமும் கூறவில்லை. அங்குள்ள யாரிடமும் அவா் பேசமால் இருந்துள்ளாா். இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.