தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

Wait 5 sec.

தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் 15 நாள்களுக்கு காவிரி நீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தில்லியில் இன்று (அக். 8) காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை என தமிழ்நாடு அரசு சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் 15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், தமிழக அரசின் கோரிக்கைக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மறுப்பு தெரிவித்தது.இருப்பினும், தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் 15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிட ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது.இந்த நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் 15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கண்டிப்பாக திறக்க முடியாது என கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும்நிலையில், 15 நாள்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மேக்கேதாட்டு அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடகம்! மார்ச் மாதத்துக்குள் அடிக்கல்!Cauvery Water Management Authority orders release of Cauvery water to Tamil Nadu