11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை..! யூடியூப் பிரபலம் நிஷா மீது போக்சோ வழக்கு!

Wait 5 sec.

கேரள யூடியூப் பிரபலம் டாக்டர் நிஷா ரஃபேல் மீது மேற்கு திரிசூர் காவல்துறையினர் போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நிஷா ரஃபேல் மீது வழக்குப் பதியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூடியூபில் 1.27 லட்சம் ஃபாலோயர்களை வைத்துள்ள டாக்டர் நிஷா உத்வேகம் அளிக்கும் பேச்சுகளால் கவனம் பெற்றார். கேரளத்தில் பொருளாதாரம் பாடப் பிரிவில் ஆசிரியையாகவும் பணியாற்றியுள்ளார். வித்தியாசமான கற்பித்தல் முறைகளுக்கும் உத்வேகம் அளிக்கும் பேச்சுக்காகவும் சமூக வலைதளத்தில் புகழ்பெற்றார். இன்ஸ்டாகிராமிலும் இவரது கணக்கினை 3.76 லட்சம் ஃபாலோயர்கள் பின்பற்றுகிறார்கள். இந்த நிலையில், 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மேற்கு திரிசூர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்குப் பதியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் பாலியல் தொல்லை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிஷா ரஃபேல் தரப்பில் முற்றியிலும் பொய்யானதெனவும் கூறி வருகிறார்கள். காவல்துறை வழக்கினைப் பதிவு செய்து முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் விரைவில் கூடுதல் தகவல்களை அறிவிப்போம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பேசி மயக்கும் கலை... பெண்ணை ஏமாற்றிய முத்துக்குமரனை விமர்சித்த கவிஞர் தாமரை!Sexual assault against 11-yr-old boy: Social media influencer Nisha Raphael booked in POCSO case