கவனம் ஈர்க்கும் அய்யனார் துணை நாயகி மதுமிதாவின் பூக்கி பொன்னம்மா பாடல்!

Wait 5 sec.

முதல்முறையாக லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ சுயாதீன பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இந்த சுயாதீன இசைப் பாடலில் அய்யனார் துணை நாயகி மதுமிதா - பாலாஜி ஆகியோர் நடனமாடி இருக்கின்றனர்.ஸ்டோரி கல்ச்சர் நிறுவனம் தயாரிப்பில், சரிகம நிறுவனம் வெளியீட்டில், பாலாஜி – மதுமிதா நடிப்பில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது.பிரபல நடன இயக்குநர் சசி மாஸ்டர் இந்தப் பாடலை இயக்கியதுடன், நடன அமைப்பையும் மேற்கொண்டுள்ளார். பாடலுக்கு ஏஜே இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், ஸ்நேகா ஆகியோர் பாடியுள்ளார். . பாடலுக்கான வரிகளை K.U. கார்த்திக் எழுதியுள்ளார்.‘பூக்கிபொன்னம்மா’ சுயாதீன பாடலின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று(அக். 7) நடைபெற்றது. படக்குழு தெரிவித்தபடி, லண்டனில் முழுமையாக படமாக்கப்பட்ட முதல் ஆல்பம் பாடல் என்ற சிறப்புடன் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. இதில் ‘பூக்கி பொன்னம்மா’ பாடல் குழுவினருடன், திரையுலகம் மற்றும் சின்ன திரையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரில் நாயகியாக மதுமிதா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.The independent song Pookie Ponnamma, filmed in London for the first time, has been released and is capturing the attention of fans.திருமணம், காதல் ஏதும் இல்லை.... பாடல் வெளியீடு குறித்து அறிவித்த அய்யனார் துணை நடிகை மதுமிதா!