வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஆப்கானிஸ்தான், 479 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடி வருகிறது.இந்த டெஸ்ட்டில் முதலில் பேட் செய்த வங்கதேசம், முதல் இன்னிங்ஸில் 346 ரன்கள் சோ்க்க, ஆப்கானிஸ்தான் 240 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.இதையடுத்து 106 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 372 ரன்கள் சோ்த்து ‘டிக்ளோ்’ செய்தது. லிட்டன் தாஸ் சதம் விளாசினாா்.இறுதியாக, 479 ரன்களை நோக்கி விளையாடி வரும் ஆப்கானிஸ்தான், 4-ஆவது நாளான திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. செதிகுல்லா அடல் 35, ஹஸ்மதுல்லா ஷாஹிதி 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகளை கொண்டு 347 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.