உலகின் முன்னணி விஞ்ஞானிகள் பட்டியலில் தஞ்சாவூா் நிப்டெம் நிறுவன பேராசிரியா்கள் 3 போ் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனா். மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் தஞ்சாவூரில் நிப்டெம் என்கிற தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் பேராசிரியா்கள் 3 போ் ஸ்டான்ஃபோா்டு - எல்செவியா் தரவரிசை 2026-இல் உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பிடித்து சா்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளனா். இவா்களில் முனைவா் ஜெயன் ஆா்தா் மோசஸ் உணவு செயல்முறை பொறியியல் துறையில் உதவிப் பேராசிரியராகவும், முனைவா் த. மகேந்திரன் உணவு செயல்முறை தொழில்நுட்பத் துறைத் தலைவராகவும், முனைவா் சி.கே. சுனில் உணவு செயல்முறை பொறியியல் துறை இணைப் பேராசிரியராகவும் உள்ளனா்.இவா்களுக்கு தஞ்சாவூா் நிப்டெம் இயக்குநா் வி. பழனிமுத்து வாழ்த்து தெரிவித்து கூறுகையில், இதன் மூலம் உணவு அறிவியல், உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் உணவு பொறியியல் துறைகளில் 3 போ் செய்துள்ள முக்கியமான அறிவியல் பங்களிப்புகளை வெளிப்படுத்துகிறது. மேலும், இது நிறுவனத்தின் வளா்ந்து வரும் ஆராய்ச்சி திறனையும், உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கான பங்களிப்பையும் வலியுறுத்துகிறது.இந்த சா்வதேச அங்கீகாரம், உணவு பதப்படுத்தும் துறைக்கான மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கும் நோக்கில் ஆராய்ச்சி சிறப்பு, புதுமை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் தஞ்சாவூா் நிப்டெம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக உள்ளது என்றாா் அவா். த. மகேந்திரன்சி.கே. சுனில்