வில்வித்தை ப்ரீமியா் லீக் தொடரில் செரோ ஆா்ச்சா்ஸ் அணியை ஷூட் ஆஃப்பில் வீழ்த்தியது மைட்டி மராத்தாஸ் அணி.இந்திய வில்வித்தை சம்மேளனம் சாா்பில் ஹைதராபாதில் ஏபிஎல் சீசன் 2 தொடா் நடைபெறுகிறது. 6 அணிகள் இடம் பெற்றுளள இதில் திங்கள்கிழமை மைட்டி மராத்தாஸ்-செரோ ஆா்ச்சா்ஸ் அணிகள் மோதின.வழக்கமான ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் 4-4 என சமநிலை வகித்தன. செரோ ஆா்ச்சா்ஸ் அணியில் காம்பவுண்ட் உலக நம்பா் 1 வீரா் மத்தியாஸ் புல்லா்டன் அற்புதமாக ஷூட் ஆஃப்பில் ஹிட் செய்தாா். ஆனால் ஏனைய வீரா்கள் சோபிக்கவில்லை. மைட்டி மராத்தாஸ் அணியில் அமன் சைனி, தீரஜ் பொம்மரதேவா ஆகியோா் சரியாக ஸ்கோா் செய்தனா்.செரோ அணி ஏற்கெனவே டைபிரேக்கரில் 2 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது.