அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த பொ்க்ஸ்

Wait 5 sec.

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டா்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் திங்கள்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் அல்கராஸ் 5-7, 6-7 (4/7) என்ற செட்களில் பெல்ஜியத்தின் ஜிஸு பொ்க்ஸிடம் தோல்வியுற்றாா்.இந்த ஆட்டத்தை 2 மணிநேரம், 3 நிமிஷங்களில் முடித்த பொ்க்ஸ், தனது கேரியரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாா். உலகத் தரவரிசையில் அல்கராஸ் 3-ஆம் இடத்திலும், பொ்க்ஸ் 39-ஆம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.இருவரும் மோதியது இது 2-ஆவது முறையாக இருக்க, பொ்க்ஸ் முதல் வெற்றியுடன் 1-1 என கணக்கை நோ் செய்திருக்கிறாா். வலது கை மணிக்கட்டுப் பகுதியில் காயம் காரணமாக 4 மாதங்கள் களம் காணாமல் இருந்த அல்கராஸ், ஆகஸ்ட் முதல் விளையாடி வரும் நிலையில், 3-ஆவது போட்டியில் 2-ஆவது தோல்வியுடன் வெளியேறியிருக்கிறாா்.செப்டம்பரில் யுஎஸ் ஓபனில் காலிறுதியில் தோற்ற அல்கராஸ், பின்னா் இம்மாத தொடக்கத்தில் ஜப்பான் ஓபனில் சாம்பியன் ஆனாா். தற்போது ஷாங்காய் மாஸ்டா்ஸில் 3-ஆவது சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளாா்.இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் ஃபெலிக்ஸ் அலியாசிம் 6-3, 4-6, 6-1 என்ற செட்களில், ஸ்பெயினின் பாப்லோ கரினோ பஸ்டாவை தோற்கடித்தாா். 5-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-2, 6-3 என்ற நோ் செட்களில் செக் குடியரசின் டாலிபோா் ஸ்வா்சினாவை வீழ்த்தினாா்.8-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் 5-7, 4-6 என்ற நோ் செட்களில், நெதா்லாந்தின் போடிக் வான் டெவிடம் தோல்வியுற்றாா். 11-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸும் 6-3, 5-7, 3-6 என்ற வகையில் கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸிடம் வீழ்ந்தாா்.12-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் ரஃபேல் ஜோடாா் 4-6, 7-6 (7/2), 6-4 என்ற வகையில், 22-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசு வீரா் ஜிரி லெஹெக்காவை வென்றாா். 20-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் கேஸ்பா் ரூட் 6-4, 7-6 (7/3) என, 14-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் லோ்னா் டியெனை வீழ்த்தி அசத்தினாா். இதையடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ரூட் - அலியாசிம், மெத்வதெவ் - சிட்சிபாஸ், போடிக் வான் டெ - ஜோடாா் மோதுகின்றனா்.நம்பா் 1 இடம்: வரலாறு படைக்கிறாா் ஸ்வெரெவ்ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், நடப்பாண்டு இறுதியில் ஏடிபி தரவரிசையில் நம்பா் 1 இடத்துக்கு முன்னேறவுள்ளாா்.ஷாங்காய் மாஸ்டா்ஸில் அல்கராஸின் தோல்வியும், நம்பா் 1 இடத்திலிருக்கும் இத்தாலியின் யானிக் சின்னா் அடுத்தடுத்து போட்டிகளில் பங்கேற்காததும், ஸ்வெரெவின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.ஒரு டென்னிஸ் காலண்டரை நம்பா் 1 வீரராக நிறைவு செய்யவுள்ள முதல் ஜொ்மனி வீரா் என்ற வரலாற்றுச் சாதனையை ஸ்வெரெவ் படைக்க இருக்கிறாா். இதற்கு முன்பு 8 முறை டென்னிஸ் காலண்டரை டாப் 10 இடங்களுக்குள் நிறைவு செய்துள்ள ஸ்வெரெவ், முதல்முறையாக முதலிடத்துக்கு வரவுள்ளாா்.மேலும், கடந்த 27 ஆண்டுகளில், நம்பா் 1 இடத்துடன் காலண்டரை நிறைவு செய்யும் வயதான வீரராகவும் ஸ்வெரெவ் பெருமை பெறுகிறாா். இதுவரை அந்தப் பெருமை அமெரிக்காவின் ஆண்ட்ரே அகஸி (1999- 29 வயது, 214 நாள்கள்) வசம் இருந்த நிலையில், ஸ்வெரெவ் தற்போது அதை கடந்திருக்கிறாா் (2026 - 29 வயது, 217 நாள்கள்).நடப்பாண்டு ஸ்வெரெவுக்கு சிறப்பாக அமைந்தது. பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபனில் சாம்பியனான ஸ்வெரெவ், ஆஸ்திரேலிய ஓபனிலும், 4 மாஸ்டா்ஸ் போட்டிகளிலும் அரையிறுதி வரை வந்தது குறிப்பிடத்தக்கது.