13.10.1976: பம்பாயில் விமான விபத்தில் 95 பேர் பலி - சென்னைக்கு கிளம்பியவுடன் கீழே விழுந்து நொறுங்கியது

Wait 5 sec.

பம்பாய், அக். 12 - பம்பாயிலிருந்து இன்று அதிகாலை சென்னைக்கு கிளம்பிய விமானம் சற்று நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்திலிருந்த 95 பேரும் உயிரிழந்தனர். விமான என்ஜின் தீப்பிடித்ததே விபத்துக்குக் காரணம். உயிரிழந்தவர்களில் பலர் தமிழ்நாட்டைச் சோந்தவர்கள். இவர்களது உறவினர்களில் பலர் பம்பாய்க்குப் பயணமாகியுள்ளனர். சடலங்களில் பெரும்பாலானவை அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விமானம் மேலே கிளம்பிய உடனேயே இஞ்சின்களில் ஒன்று தீப்பிடித்துக்துக் கொண்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினார். விமான காப்டன் கே. பி. குப்தா விமானத்தைத் திருப்பிக் கொண்டுவர முயற்சித்ததாகவும், ஆனால், விமானத்தின் ஒருபகுதி மேலேயே சுழன்று விட்டதாகவும், விமானம் கீழே விழுந்துவிட்டதாகவும் அவர்கள் சொன்னார்கள்.விமானத்தின் பெரும் பகுதியும், பல பிரேதங்களும் தீயில் கருகிவிட்டன.விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் 17 பெண்கள் உள்பட 89 பிரயாணிகளும், ஆறு விமான சிப்பந்திகளும் இருந்தார்கள்.துரதிருஷ்டம் விடவில்லைமாலை 6 மணிக்கு சென்னைக்கு ஒரு விமானம் புறப்பட்டிருக்க வேண்டும். சென்னையிலிருந்து வந்த ஒரு போயிங் விமானம் தான் அப்படிப் புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த போயிங் விமானதில் ஏதோ இஞ்சின் கோளாறு ஏற்பட்டதால் அது ரத்து செய்யப்பட்டு, காரவெல் விமானத்தில் பிரயாணிகள் ஏற்றப்பட்டார்கள். இந்த விமானம் இரவு 1 மணிக்குப் புறப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திற்குள்ளாகவே அது விபத்துக்குள்ளாகியது. தீயணைப்பு படையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். ஆனால், எல்லோரும் இறந்து விட்டதால் மீட்பு படையினர் செய்யக் கூடியது எதுவுமில்லாமற் போய்விட்டது.விமானம் புறப்பட்ட சில நிமிஷங்களுக்கெல்லாம் விமான காப்டன் கண்டிரோல் அறைக்கு ஒரு செய்தி அனுப்பினார். ஒரு இஞ்சினில் தீப்பிடித்திருப்பதாகவும், ஆகையால் தான் திரும்பி வந்து கிழே இறங்க அனுமதிக்க வேண்டுமென்றும் அந்தச் செய்தியில் அவர் கூறியிருந்தார்.விமானியின் சாமர்த்தியம்ஆனால், சில நிமிஷங்களுக்குள்ளாகவே விமானம் தீப்பந்தம் போல் தோற்றமளித்ததாக நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள். விமானத்தின் ஒரு பகுதி கழன்று விட்டபோதிலும் காப்டன் குப்தா சாமர்த்தியமாக அந்த விமானத்தைத் திருப்பினார். இதனால் அந்த விமானம் பெட்ரோல் டாங்குகள் இருந்த பகுதியில் விழவில்லை.விபத்து நடந்த இடத்திற்கருகில் வசித்து வந்தவர்களில் பலர் விமானம் விழுந்ததைப் பார்த்த உடன் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார்கள். பத்து தீயணைப்பு வண்டிகளும் இதர சாதனங்களும் விரைவில் அங்கு போய்ச் சேர்ந்தன.மூன்று நீர்க் குழாய்கள் மூலம் எரிந்து கொண்டிருந்த விமானத்தின் மீது ஜலம் வீசப்பட்டது. சில நிமிஷங்களுக்குள்ளாகவோ அது அணைந்து விட்டது. ஆனால் அதற்குள் விமானம் கருகிப் போய் விட்டது. பிரேதங்களும் கருகிவிட்டன. உயிர் இழந்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பிரேதங்கள் எரிந்து கருகிவிட்டன.பம்பாயிலிருந்து புறப்பட்டவர்களை வழி அனுப்புவதற்காக வந்திருந்த உறவினர்களில் பலர் விபத்து நடந்தபோது விமான நிலையத்தில் இருந்தனர்.ஜனக்கூட்டம் அதிகமாகிவிட்டதால், பாதுகாப்புக்காக 350 ராஜ்ய ரிசர்வ் போலீசார் அந்த இடத்துக்குக் கொண்டு வரப்பட்டனர். ...மாவோ மனைவி உள்பட 4 சீன தலைவர்கள் கைதுபீகிங், அக், 12- மறைந்த சீனத் தலைவர் மா-சே-துங்கின் மனைவியும், இன்னும் 3 சீன உயர் தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் ஒரு " திடீர்ப் புரட்சியை" நடத்த முயன்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்த 4 பேரும் சீன கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழுவின் (பொலிட்பீரோ) இடதுசாரி தீவிரவாதிகள் ஆவர். மா-சே- துங்கின் மனைவி பெயர் சியாங்-சிங்; கைதாகியுள்ள இதர மூன்று உயர்தலைவர்கள் வருமாறு:- 1. வாங்- ஹங்-வென், 2. யுவான் சாங்-சின்-சியாவ். 3. யோ-வென்.இந்த 4 பேரும் ஷங்காய் மாபியா என்று கேலியாகக் குறிப்பிடப்பட்டு வந்தனர். ஷங்காய் என்பது சீனாவிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள நகரமாகும்; "மாபியா" என்பது ரெளடிக் கும்பலைக் குறிக்கும் ஓர் ஆங்கிலோ-இத்தாலிய வார்த்தை. "ஷங்காய் மாபியா" என்றால் ஷங்காய் நகரின் ரெளடிக் கும்பல் என்று பொருளாகும்.கைதாகியுள்ள 3 அதிகாரிகளில் வாங்- ஹங்- வென் என்பவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் ஆவார்; அவருக்கு வயது 40; சீனாவில் மா-சே-துங்கிற்கு அடுத்தபடியாக இவர்தான் அவரது வாரிசாக வருவார் என்று கடந்த ஆண்டு வரையில் கருதப்பட்டது. ...95 killed in plane crash in Bombay – Aircraft crashed shortly after taking off for Chennai.12.10.1976: நடிகை எலிஸபெத் டெய்லர் 7-வது தடவையாக திருமணம்