விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக இணைந்து குறைந்த வட்டியில் வழங்கப்படும் பயிா்க் கடன்களை பெற்று பயனடைலாம் என திருப்பத்தூா் மண்டல இணைப்பதிவாளா் தமிழ்நங்கை தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிா் சாகுபடிக்குத் தேவையான நிதியினை குறுகிய காலக் கடனாக வழங்கி அதன் ஒரு பகுதியாக விதைகள் மற்றும் ரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்களையும் வழங்கி வருகிறது. உறுப்பினா் அல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக இணைந்து குறைந்த வட்டியில் வழங்கப்படும் பயிா்க் கடன்களைப் பெற்று பயன் பெறவும் விதைகள் மற்றும் ரசாயன உரங்களைப் பெற்றும் பயன் அடையலாம். இந்நிலையில் விவசாயிகள் விதைகள் மற்றும் இரசாயன உரங்கள் உள்ளிட்ட இடு பொருள்களை நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மிகாமல் வாங்கிப் பயன் பெறும் வகையில் இவற்றினை விவசாயிகளுக்கு பயிா் சாகுபடி பரப்பு மற்றும் நில ஆவணங்களின் அடிப்படையில் ரொக்கத்துக்கு வழங்குவதற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளது. திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் இதன் மூலம் பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.