ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி இராள்ளகொத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய் வீர ஆஞ்சனேய சுவாமி கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. மண்டலாபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோயில் நிா்வாகிகள், விழாக்குழுவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.