வியன்னா, அக். 10 - உலகப் பிரசித்தி பெற்ற சினிமா நடிகை எலிஸபெத் டெய்லருக்கு இப்போது வயது 44 ஆகிறது.அவர் இதுவரை ஆறு தடவை மணந்து கொண்டிருக்கிறார். எலிஸபெத்துக்கு குழந்தைகள் உண்டு. பேரப் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.எலிஸபெத் டெய்லர் மீண்டும் மணந்துகொள்ளப் போவதாக அவருடைய காரியதரிசி இன்று அறிவித்தார்.எலிஸபெத்தை மணந்து கொள்ளவிருப்பவர் முன்னாள் யு. எஸ். கடற்படைக் காரியதரிசி ஜான் வார்னர். அவருக்கு வயது 49 ஆகிறது. வார்னர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.அமெரிக்கா இரண்டாவது நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுவதற்காக பிரிட்டிஷ் அரசி ஜூலை மாதத்தில் யு.எஸ். வந்திருந்தார். அரசி அளித்த ஒரு வரவேற்பில்தான் நடிகை எலிஸபெத்தும், வார்னரும் முதல் முதலாகச் சந்தித்துக் கொண்டார்கள்.வார்னர் ஒரு வாரத்திற்கு முன்புதான் ராஜிநாமா செய்தார். அவர் அமெரிக்க 2-வது நூற்றாண்டு விழா கமிட்டியின் தலைவராக இருந்தார்.நடிகை எலிஸபெத் டெய்லர் சென்ற ஜூலை மாதத்தில் தான் தன்னுடைய ஆறாவது கணவரா நடிகர் ரிச்சர்ட் பர்ட்டனை விவாகரத்து செய்து கொண்டார். இந்த விவாகரத்துக்குப் பிறகு பர்ட்டன் பிரிட்டிஷ் மோட்டார் பந்தய டிரைவர் ஜெமிஸ்ஹன்ட் என்பவரின் முன்னாள் மனைவியை மணந்து கொண்டார்.மின்சார சட்டத்தை திருத்த ராஷ்டிரபதி அவசரச் சட்டம்புதுடில்லி, அக். 11- மின்சார சப்ளை தொழிலை திருத்தியமைக்க அரசாங்கம் எடுத்துள்ள பல முடிவுகளை செயல்படுத்த 1948 வருடத்திய மின்சார (சப்ளை) சட்டத்தின் சில பிரிவுகளை திருத்த ராஷ்டிரபதி ஒரு அவசர சட்டத்தை பிரகடனம் செய்திருக்கிறார்.மத்திய மின்சார ஆணைக்குழுவின் அமைப்பு, மற்றும் அலுவல்கள் சம்பந்தப்பட்டது முக்கியமான திருத்தங்களில் ஒன்று. அவசர சட்டப்படி மத்திய மின்சார ஆணைக்குழு ஆற்ற வேண்டிய பணி கணிசமாக அதிகரிக்கும்.தேசிய விசைத் திட்டத்தை வகுப்பது, விசைத் திட்டங்களின் தொழில்நுட்ப பொருளாதார மதிப்பீடுகளை செய்வது, விசைத் திட்டங்களை மேற்பார்வையிடுவது, மாநில மின்சார வாரியங்களுக்கு தொழில் நுட்ப உதவி அளிப்பது முதலிய விஷயங்களுக்கு மத்திய மின்சார ஆணைக்குழு பொறுப்பு வகிக்கும்.ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான செலவுள்ள எந்த விசைத் திட்டத்தையும் மத்திய மின்சார ஆணைக் குழுவின் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுத்த முடியாது.நாட்டில் மின்சார உற்பத்தி சப்ளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், மாநில மின்சார வாரியங்கள் ஆகியவற்றை அமைப்பதற்கான வரம்பை மூலச்சட்டம் வகை செய்தது. ...12.10.1976: Actress Elizabeth Taylor marries for the 7th time.9.10.1976: த.நா. மாஜி மந்திரிகள் மீதான புகார்கள் - சிபிஐ விசாரணை பூர்த்தி