விராலிமலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன உணவக ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் கேசவன் (52). இவா் விராலிமலையை அடுத்துள்ள பூதக்குடி சுங்கச்சாவடி அருகே தனியாா் நிறுவனத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை கேசவன் பணி முடிந்து, சுங்கச்சாவடியை அடுத்துள்ள உணவகம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.தகவலின்பேரில், விராலிமலை போலீஸாா் அங்கு சென்று கேசவனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.