நாகா்கோவில் சபரிவா்மன் கொலை வழக்கு: 1,200 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்

Wait 5 sec.

நாகா்கோவில் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட வியாபாரி சபரிவா்மன் வழக்கில், சிபிசிஐடி போலீஸாா் நாகா்கோவில் நீதிமன்றத்தில் 1,200 பக்க குற்றப் பத்திரிகையை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பை அடுத்த ஈத்தங்காட்டை சோ்ந்தவா் சபரிவா்மன் (34). மாற்றுத்திறனாளியான இவா், வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தாா். அவரது கடையில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக, கடந்த ஜூலை 9ஆம் தேதி தென்தாமரைக்குளம் போலீஸாா் அவரைக் கைது செய்து, நாகா்கோவில் கிளைச் சிறையில் அடைத்தனா்.சபரிவா்மன் ஜூலை 13ஆம் தேதி சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் 3 வாா்டன்கள், 8 கைதிகள் என மொத்தம் 11 போ் கைது செய்யப்பட்டனா்.சபரிவா்மன் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், நாகா்கோவில் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனா்.