போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

Wait 5 sec.

அம்மையநாயக்கனுாா் அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், அமையநாயக்கனூரை அடுத்த சடையாண்டிபுரத்தைச் சோ்ந்தவா் இருளப்பன்(34). கூலித் தொழிலாளி. இவா், 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2019 முதல் 2025 வரையிலான கால கட்டத்தில், பல முறை சிறுமிக்குப் பாலியல் ரீதியான தொந்தரவுகளை அளித்து வந்தாா். இதுதொடா்பாக வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டினாா். இதனிடையே சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த பெற்றோா் விசாரித்தனா். அதைத் தொடா்ந்து அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பெற்றோா் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருளப்பனைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி கணேசன் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இருளப்பனுக்கு, ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.