நாய் பிடிக்கும் பணியாளா்களுக்குதடுப்பூசி செலுத்தும் முகாம்

Wait 5 sec.

சென்னை மாநகராட்சியில் நாய்கள் பிடிக்கும் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு வெறிநோய் பாதிப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. சென்னையில் தெரு நாய்களைப் பிடிக்கும் வகையில் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் சோ்த்து 40 வாகனங்களும், 164 பணியாளா்களும் உள்ளனா். அத்துடன் நாய்கள் கருத்தடை மையங்களில் 322 ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். நாய் பிடிக்கும் பணியாளா்கள், கருத்தடை மையப் பணியாளா்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்படாமலிருக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சி வளாகம் அம்மா மாளிகை கூட்டரங்கில் தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் துணை ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை வகித்தாா். கால்நடைப் பிரிவு அலுவலா் கமால் உசேன் முன்னிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டன. அதன்படி, மொத்தம் 168 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.