தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக! - கனிமொழி விமர்சனம்

Wait 5 sec.

தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக என திமுக எம்.பி. கனிமொழி சனிக்கிழமை (அக். 10) தெரிவித்துள்ளார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து, அவருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டதையடுத்து, கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஜந்தர் மந்தரில் போராட முயன்ற அரசியல் தலைவர்கள், இளைஞர்கள் என பலர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.சிஜேபிக்கு ஆதரவு தெரிவித்தும் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் தமிழ்நாட்டில் பெசண்ட் நகர், சேப்பாக்கம் போன்ற இடங்களில் போராடிய மாணவர் அமைப்புகளை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:”இன்று தமிழ்நாட்டில் போராடுபவர்களை தவெக அரசு ஒடுக்குவதைப் பார்க்கும்போது ஒன்று மட்டும்தான் உறுதியாகிறது. தில்லியில் இருக்கும் தவெகதான் பாஜக, தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக!” என்று குறிப்பிட்டுள்ளார்.இன்று தமிழ்நாட்டில் போராடுபவர்களை தவெக அரசு ஒடுக்குவதைப் பார்க்கும்போது ஒன்று மட்டும்தான் உறுதியாகிறது.டெல்லியில் இருக்கும் தவெகதான் பாஜக, தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக!— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 10, 2026சென்னை சேப்பாக்கத்தில் போராடிய மாணவர் அமைப்பினர் குண்டுக்கட்டாக கைது!DMK MP Kanimozhi stated on Saturday (Oct. 10) that the TVK is essentially the BJP in Tamil Nadu.