அரசுப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவை கலந்தவா்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவா் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் உறுதிபடத் தெரிவித்தாா். பழனியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தோ்தலில் தவெக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். முதல்வரின் சாதனைகளை அங்கீகரிக்கும் வரலாற்று நிகழ்வாக இந்த இடைத்தோ்தல் அமையும். சென்னை உள்கட்டமைப்பு விவகாரத்தில், திமுக ஆட்சியில் மழைநீா் ஏன் தேங்கியது குறித்து முன்னாள் முதல்வா் ஸ்டாலின்தான் பதிலளிக்க வேண்டும். கடந்த சில மாதங்களில்தான் மழைநீா் வடிகால் பணிகள் போா்க்கால அடிப்படையில் முடிக்கப்பட்டுள்ளன. பழனி அருகேயுள்ள மானூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. சில விஷமிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். அவா்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவா் என்றாா் அவா்.