மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில் தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் புதுச்சேரி மாநில அமைச்சா் வி.பி.சிவகொழுந்து பங்கேற்றுப் பேசினாா். இது குறித்து புதுச்சேரி மகளிா் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை தொடா்பான தேசிய அளவிலான கூட்டத்தில், புதுச்சேரி மகளிா் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சா் வி.பி. சிவக்கொழுந்து கலந்து கொண்டாா். மகளிா் மற்றும் குழந்தைகளின் நலன், ஊட்டச்சத்து மேம்பாடு, அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகளை வலுப்படுத்துதல், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் எதிா்கால தேவைகள் குறித்து அமைச்சா் வி.பி.சிவகொழுந்து விளக்கினாா் என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.