அந்த இன்னொரு நபரையும் அறிய காத்திருங்கள்! - அம்பானி பற்றிய எலான் மஸ்க்கின் பதிவுக்கு ராகுல் பதில்!

Wait 5 sec.

தொழிலதிபர் முகேஷ் அம்பானி குறித்து எலான் மஸ்க் வெளியிட்ட பதிவுக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இணையதள சேவை வழங்கப்படுவதை முகேஷ் அம்பானி தடுத்து வருவதாக, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் குற்றஞ்சாட்டினார். இத்துடன், 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் நிறுவனம் உரிமம் பெற்றதுடன், இந்திய அரசின் ஒவ்வொரு விதிமுறையையும் பின்பற்றி வருகிறது எனவும், அம்பானிதான் இந்தியாவின் முதலாளியா எனவும் எலான் மஸ்க் இன்று (அக். 8) தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில், எலான் மஸ்க்கின் பதிவைக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, அந்த இன்னொரு நபரையும் அறியும் வரையில் காத்திருங்கள் என எலான் மஸ்க்கிற்கு பதிலளித்துள்ளார். இதுபற்றி, ராகுல் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவுக்கு உங்களை (எலான்) வரவேற்கிறோம். அந்த இன்னொரு நபரையும் அறியும் வரையில் நீங்கள் காத்திருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் எலான் மஸ்க்கின் பெயரைக் குறிப்பிடாத மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம், “இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் தவறானவை” என்று விளக்கமளித்து குற்றச்சாட்டை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.அம்பானி இந்தியாவின் முதலாளியா? எலான் மஸ்க் கடும் தாக்குRahul Gandhi, has responded to a post by businessman Mukesh Ambani shared by Elon Musk.