சிஜேபி போராட்டம் எதிரொலியாக இன்று பிற்பகலுக்குப் பிறகு தில்லி புறப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்ய இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) நடைமுறையில் முறைகேடு செய்ததாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி சிஜேபி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தில்லியில் உள்ள ஜந்தர் - மந்தர் பகுதியில் நாளை (அக். 10) மாபெரும் போராட்டத்துக்கு சிஜேபி கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.இந்த நிலையில், இன்று பிற்பகலுக்குப் பிறகு தில்லி புறப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்ய இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இதுதொடர்பாக, இந்திய ரயில்வே துறை ரீதியாக அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.அதில், புது தில்லி மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 10 அன்று அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணிக்குள் இவ்விரு நிலையங்களுக்கும் வந்து சேரும் அனைத்து மெயில் மற்றும் விரைவு ரயில்களையும் ரத்து செய்ய இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.மேலும், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மேல் புறப்பட்டு, சனிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணிக்குள் குறிப்பிட்ட இரு ரயில் நிலையம் வந்தடையவிருந்த அனைத்து மெயில் மற்றும் விரைவு ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக பொதுமக்களுக்கு ரயில்வே தரப்பில் இன்னும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இருப்பினும், அந்தந்த மண்டல ரயில்வே நிர்வாகம், ரத்து தொடர்பான செய்திகளை வெளியிடத் தொடங்கியுள்ளன.தற்போது, மத்திய ரயில்வேவின் கீழ் இயங்கும் மும்பை மண்டலத்திலிருந்து இன்று தில்லி புறப்படும் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.CJP Protest! Trains departing Delhi after this afternoon cancelled!தில்லியில் சிஜேபி போராட்டம்: 20,000-க்கும் அதிகமான காவலா்கள், பாதுகாப்புப் படையினா் குவிப்பு