மேற்கு வங்கம் இடைத்தேர்தல்! முன்னிலை நிலவரம்

Wait 5 sec.

மேற்கு வங்கத்தில் ரெஜிநகா், நந்திகிராம் ஆகிய இரு பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.ரெஜிநகா் பாஜக வேட்பாளர் சகராவ் சர்க்கார், நௌடா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பளார் ஹசிராணி ரத் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். மிகுந்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணும் பணி தொடங்கியிருக்கிறது.மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி, பாஜக முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றது. பவானிபூா், நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வா் சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். ரெஜிநகா், நௌடா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற ஆம் ஜனதா உன்னாயன் கட்சியின் (ஏஜேயுபி) நிறுவனா் ஹுமாயூன் கபீா், ரெஜிநகா் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, நந்திகிராம், ரெஜிநகா் ஆகிய இரு தொகுதிகளிலும் கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.திரிணமூல் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், நந்திகிராம் தொகுதியில் மம்தா அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சஞ்சிதா பிரதான், திடீரென முதல்வா் சுவேந்து அதிகாரியை சந்தித்துப் பேசியதுடன், தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றாா். இதையடுத்து, அந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக மம்தா அறிவித்தாா். ரெஜிநகரில் பாஜக, மம்தாவின் இரு அணிகள், காங்கிரஸ், ஏஜேயுபி என பலமுனை போட்டி நிலவுகிறது. முதல் சுற்று முன்னிலை நிலவரத்தில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.