அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா வழக்கில் இன்று தீர்ப்பு இல்லை!

Wait 5 sec.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விடுப்பு எடுத்ததன் காரணமாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்த வழக்கில் இன்று வழங்கப்படவிருந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதிமுகவைச் சோ்ந்த 6 எம்எல்ஏ-க்களின் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவா் எம்.எல். ரவி ஆகியோா் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்திருந்தனா்.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமா்வு வெள்ளிக்கிழமை காலை தீா்ப்பளிக்கவுள்ளதாக பட்டியலிடப்பட்டிருந்தது.இந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி இன்று விடுப்பு எடுத்ததால் இன்று வழங்கப்படவிருந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.வருகின்ற அக். 12 ஆம் தேதி திங்கள்கிழமைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.இதேபோல், நகராட்சி நிா்வாகம் - குடிநீா் வழங்கல் துறை பணி நியமன முறைகேடு தொடா்பான வழக்குகளிலும் இன்று தலைமை நீதிபதி அமர்வு வழங்கவிருந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.No verdict today in the AIADMK MLAs' resignation case!சிஜேபி போராட்டம்! இன்று பிற்பகலுக்கு பிறகு தில்லி புறப்படும் ரயில்கள் ரத்து!