அசாம் மாநிலம் நாகோன் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் தேவசிஷ் சர்மா முன்னிலை வகித்து வருகிறார். அசாம் மாநிலம் நாகோன் மக்களவைத் தொகுதிக்கு கடந்த அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 10.30 மணி நிலவரப்படி, பாஜக வேட்பாளர் தேவசிஷ் சர்மா முன்னிலை வகித்து வருகிறார். அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் முஹம்மது பத்ருதீன் அஜ்மலைவிட பாஜக வேட்பாளர் 44,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.காங்கிரஸ் வேட்பாளர் சிவமோனி போரா 3 ஆம் இடத்தில் உள்ளார். இத்துடன் தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி, மேற்குவங்கத்தில் ரெஜிநகர், நந்திகிராம் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. Assam Nagaon Lok Sabha constituency: BJP leading: Congress in third place